சந்திரமுகி-2 படத்தில் இந்த பாலிவுட் ஸ்டார்தான் ஹீரோயினா.?அதிகாரப்பூர்வ விளக்கம்

0
26

ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகியின் தொடர்ச்சியில் நடிப்பதாக ராகவா லாரன்ஸ் சிறிது காலத்திற்கு முன்பு அறிவித்தார். இப்போது, பரபரப்பான தகவல் என்னவென்றால், கியாரா அத்வானி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, இயக்குநர்-நடிகர்-நடன இயக்குநர் லாரன்ஸ் பி.வாசு இயக்கத்தில் முன்னணி நடிகராகவும், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளாராம். ஜோதிகா இதில் நடிக்கவில்லை என்பது முன்னதாக அவர் மூலமாகவே தெரியவந்தது. அவர் ஒரு ஆன்லைன் போர்டலுக்கு அளித்த பேட்டியின்போது, தான் இந்த படத்துக்காக அனுகப்படவில்லை என்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம், கொரோனா தொற்று நிலைமை சீரானவுடன் தொடங்கப்படவுள்ளது. ராகவா லாரன்ஸ் கியாரா அத்வானியை தன்னுடைய பாலிவுட் அறிமுகமான ‘லக்ஷ்மி பாம்’ படத்தில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.