கார்த்திக்கு வில்லனாக களமிறங்கும் கே.ஜி.எப் வில்லன்.புது தகவல் உள்ளே..

0
149

சிவா கார்த்திகேயன் வைத்து ரெமோ’ படத்தைத் இயக்கிவர் பாக்கியராஜ் கண்ணன்.தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தில் வில்லனாக நடித்த ராம்சந்திர ராஜு இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திலும் அவர் வில்லனாகத்தான் நடிக்கிறார்.