‘லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா’…!சதிஷ் டான்ஸ்…தளபதி விஜய்க்காக பிரபலங்கள் வெளியிட்ட வீடியோ வைரல்

0
47

தளபதி விஜய்யின் 46வது பிறந்த நாள். அதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளார். தற்போது லாக் டவுன் நேரத்தில் வீட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் அவர் வயலின் வாசிக்க பயிற்சி பெற்று வருகிறார். மாஸ்டர் படத்திற்காக விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் வாசித்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

அதே போல பிரபல டிவி தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் மற்றும் சம்யுக்தா நாயர் ஆகியோருடன் இணைந்து தான் சதீஷ் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தனது ட்விட்டரில் இதேபோல விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.