பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியை பற்றி கவின் இப்படி சொல்லிருக்காரே..!

0
39

கடந்த வருடம் பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகர் கவின். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் என்றாலும் அவருக்கு பிக் பாஸ் 3 மூலமாக இன்னும் மிக அதிகமான ரசிகர்கள் கிடைத்தார்கள்.இந்நிலையில் தற்போது நடந்து வரும் நான்காவது சீசன் பிக் பாஸ் பற்றி முதல் முறையாக கவின் கருத்து தெரிவித்து இருக்கிறார். ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தியின் போட்டோவை தான் அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். ஆனால் அதில் அவர் ஹார்ட் மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரியலாவுக்கு ஆதரவாக தனி ஆளாக போட்டியில் கலந்து கொண்ட பிறகு, தாத்தா என கேப்ரியலா அவரை கட்டிப்பிடித்தது பார்த்து ரசிகர்கள் பலரும் உருக்கம் ஆனார்கள். சுரேஷ் சக்ரவர்த்தி தன்னையும் கவர்ந்து விட்டார் என்பதை தான் கவின் ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டு உள்ளார்.

கவின் பிக் பாஸ் 3ல் இறுதி வரை இருந்தார், ஆனால் கடைசியில் தான் 5 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு வெளியில் செல்வதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார். அதில் பிகில் பட புகழ் அம்ரிதா அய்யர் ஹீரோயினாக நடித்துள்ளார்.