நடிகர் ரஜினியின் வரி சலுகை,விஜய் வீட்டில் வருமான வரி சோதனை..!பின்னணி குறித்து கருத்து தெரிவித்த கருணாஸ்

0
60

ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என 66 லட்சம் வருமானவரி அலுவலகம் அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து ரஜினிகாந்த் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்ய, இந்த அபராதத்தை வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது .

ஆனால் இதனை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென வருமான வரித்துறை இந்த வழக்கை வாபஸ் பெற்றது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராத தொகை இருப்பதால் இந்த வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அறிவித்தது. மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத்தொகை இருந்தால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என அரசு கொள்கை முடிவு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

நடிகர் ரஜினி பா.ஜ.க விற்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால் கூட வருமான வரித்துறை அவருக்கு விலக்கு அளித்திருக்கலாம் என தெரிவித்த கருணாஸ், படப்பிடிப்பு நடப்பதே தெரியாமல் இருந்த இடத்தில் விசாரணை என்ற பெயரில் வருமான வரித்துறை சென்றதால் தற்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி நடிகர் விஜயின் பலத்தை மத்திய மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.