சுசித்ராவை பற்றி உங்களுக்கு தெரியாது…அவரது முன்னாள் கணவர் பதிவிட்ட கருத்து செம வைரல்

0
31

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக மொத்தம் 16 பேர் முதல் நாளில் நுழைந்த நிலையில் அதற்கு பிறகு வைல்டு கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகியோர் நுழைந்து இருக்கிறார்கள். சுசித்ரா பிக் பாஸில் வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவர் பாலாஜி உடன் நெருக்கமாக தொடர்ந்து முயற்சித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதற்கு முன் சுசி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய அவர் பிக் பாஸ் வந்தால் நிச்சயம் பல சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. சுசித்ரா எப்போதும் unstable ஆக இருக்கிறார் என்ற விமர்சனம் மட்டும் மற்ற போட்டியாளர்களால் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ட்விட்டரில் சுசித்ரா பற்றி பதிவிட்டு இருக்கிறார். ரசிகர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.

இப்போ பிக் பாஸ் மீம்ஸ் பார்க்கும் போது ஹாப்பியா இருக்கீங்களா என ஒரு ரசிகர் கேட்டு இருக்கிறார். அவருக்கு பதில் கூறிய கார்த்திக் “என் முன்னாள் மனைவி (சுசித்ரா) பற்றி நான் உயர்வாக கருதுகிறேன். அவரை எனக்கு அதிகம் பிடிக்கும். அவரை பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறீர்கள், ஆனால் அவரை பற்றி யாருக்கும் தெரியாது” என கார்த்திக் தெரிவித்து உள்ளார்.சுசி லீக்ஸ் சர்ச்சை வெடித்த பிறகு கார்த்திக் குமார் சுசித்ராவை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.