இந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா..?உலகநாயகன் கொடுத்த பதில்

0
22

பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு நல்லவர்களுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது அதை தொடர்ந்து இன்று அதன் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் நாங்கள் அமைக்கும் கூட்டணி நல்லவர்களின் கூட்டணி ஆகத்தான் இருக்கும் என்று கூறினார்.மேலும் பேசிய கமல்ஹாசன் மனுஸ்மிருதி தற்போது புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம் அதைப் பற்றி பேசுவது தேவையில்லாதது என்று கூறினார். எழுவர் விடுதலை என்பது சட்டம் எடுக்க வேண்டிய முடிவு அதில் தன்னால் தலையிட முடியாது என்று கமல்ஹாசன் கூறினார்.ரஜினியின் உடல்நிலை பற்றி தனக்கு ஏற்கனவே தெரியும் என்று கூறிய கமல்ஹாசன் அரசியலா உடல்நலன் என்று பார்க்கும்போது அவரது உடல் நலனே முக்கியம். ஆனால் அது குறித்த முடிவை எடுக்க வேண்டியது ரஜினிகாந்த் தான் என்று கூறினார்.

தேர்தலை சந்திக்கும் விதமாக நவம்பர் 26, 27 தேதிகளில் கமல்ஹாசன் திருச்சி மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் டிசம்பர் 12 , 13 ஆகிய தேதிகளில் கோவை சேலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.