‘கலைகிறதே கனவே…ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ லிரிகள் வீடியோ அவுட்…

0
155

ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. மேலும் இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனம் தயாரிக்கும் 9-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் மார்ச் 27ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று எண்ணிய நிலையில் கொரோனா காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போன படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த படத்தில் நடிகை ஜோதிகாவுடனே பிரபல இயக்குநர்களும், நடிகர்களுமான திரு. பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் பொத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து ‘வா செல்லம்’ என்ற பாடலின் லிரிகள் வீடியோ கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தில் இருந்து அடுத்த பாடலான ‘கலைகிறதே கனவே’ என்ற பாடலின் லிரிகள் வீடியோ நேற்று வெளியாகி உள்ளது. சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.