இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வாலின் கேரக்டர் இதுதான்- அவரே வெளியிட்ட தகவல்!

0
243

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கமல் நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை குறித்து பேசிய அவர் நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் அதில் ஏதோ ஒரு விஷயம் ஆர்வத்தை ஏற்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும். செய்கிற வேலை புதுமையாக இருக்க வேண்டும். செய்கிற முக்கியத்துவம் இருக்கிறதா? என்று பார்ப்பேன். அதற்காக கதையில் நான் வலிய சென்று மூக்கை நுழைக்க மாட்டேன். எப்போதும் வித்தியாசமான கதைகள் நம்மை தேடி வராது.

எனவே வருகிற கதைகளில் வித்தியாசமாக செய்யும் ஆர்வத்தில் நடிப்பேன். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேன். அதில் என்னை புதுமையாக பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.