நான் கோபக்காரியா அல்ல மென்மையானவளா–மனம் திறக்கும் காஜல்

0
91

காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது ஜெயம்ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் நடித்துள்ளார்.கமல்ஹாசனின் ‘இந்தியன்–2’ படத்துக்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துகொண்டு இருக்கிறேன். இவ்வளவு நீண்ட எனது சினிமா பயணத்தில் நான் நடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் எனது மனதை தொட்டு இருக்கின்றன. கதை கேட்கும்போதே அந்த கதாபாத்திரத்தில் என்னை நான் கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிய வாழ்க்கையை அனுபவித்ததுபோல் செய்தது.

அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பேன். வீட்டுக்கு வந்தால்கூட கதாபாத்திரத்தோடு வாழ்கிறமாதிரி இருக்கும். இப்போது அதில் இருந்து விடுபட பழகி விட்டேன்.

நடிகர்கள் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து வெளியே வராவிட்டால் புதிய படங்களில் அந்த கதாபாத்திரங்களாக மாறுவது கஷ்டமாகி விடும். எனது மனது மென்மையானது. கோபம் சீக்கிரம் வந்து விடும். அன்பும் அதிகமாக காட்டுவேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.’’ இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here