சூரியாவுடன் ‘காக்கா காக்கா 2 ‘ படம்..!ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா..!

0
68

நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர் ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் கடந்த மே 29-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. கே பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் பொத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்த திரைப்படத்திற்கான ப்ரொமோஷனில் ஒரு பகுதியாக, ஜோதிகா ரசிகர்களுடன் உரையாடும் விதமாக, ஒரு ஆன்லைன் லைவ் கேள்வி-பதில் அமர்வைக் கொண்டிருந்தார். அப்போது, 2003-ஆம் ஆண்டு சூரியாவுடன் இணைந்து நடித்த பிளாக்பஸ்டர் ‘காக்க காக்க’ படத்தின் தொடர்ச்சியாக அவர் நடிப்பாரா என்று ரசிகர்களில் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஜோதிகா, கவுதம் வாசுதேவ் மேனன் காக்கா காக்கா 2 படத்துகான சுவாரஸ்யமான ஸ்கிரிப்டுடன் வந்தால், சூரியாவும் தானும் நிச்சயமாக அதில் நடிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், நாச்சியார் தொடர்ச்சியைப் பற்றி கேட்கப்பட்டபோது, நாச்சியார் 2 படத்திற்கான ஸ்கிரிப்டுடன் தயாராகும்படி இயக்குநர் பாலாவிடம் கூறுவதாக ஜோ பதிலளித்தார்.