சுடிதாரில் புதிய ட்ரெண்ட்டை அறிமுகம் செய்த ஜூலி.!வைரலாகும் புகைப்படம்!

0
141

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது.

மேலும், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார் ஜூலி. இறுதியாக இவரது விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் நடித்திருந்தார் ஜூலி. அதன் பின்னர் இவர் கதாநாயகியாக நடித்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் ஐஸ்வர்யா நடிக்க உள்ள pubg என்ற புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளாராம் ஜூலி.

என்னதான் பிஸியாக இருந்து வந்தாலும் தனது சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை பதிவிட மட்டும் அம்மணி மறப்பதில்லை. அதே போல நெட்டிசன்களும் அந்த புகைப்படங்களை கலாய்க்க மறப்பதும் இல்லை. அந்த வகையில் ஜூலி சுடிதாரில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அந்த புகைப்படம் தற்போது நெட்டிசங்களின் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.