ரீ-என்ட்ரி குறித்து ட்வீட் பதிவிட்ட WWE-பிரபலம்..!

0
98

WWE குத்துச்சண்டை அமெரிக்க மக்களால் மட்டும் அல்லது உலகில் பல மக்கள் இடையே பிரபலமான விளையாட்டு போட்டி. உலகம் முழுமையும் சிறுவர்கள், இளைஞர்கள் என WWE குத்துச்சண்டை காண்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.இதில் ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர் , ஏ.ஜெ லீ, ராக், அண்டர்டேக்கர், ட்ரிபிள் ஹச், ஜான் ஸினா,கிரேட் காளி,பிக் ஷோ இவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர்.

Image result for john cena

WWE செலிபிரட்டிஸ், திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளனர். குறிப்பாக ஜான் ஸினா, ராக் குத்துசண்டை மட்டும் அல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தினர்.இதனிடையே ஜான்ஸினா கடந்த 2019 -ம் ஆண்டு ஜூன் மாதம் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார்.

Image result for john cena

ஏற்கனவே இப்படத்தில் ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் அனைத்து பாகங்களிலும் நடித்து அசத்தியிருந்தார்.WWE-வில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்க பட்ட ஜான் ஸினா தற்போது மீண்டும் WWE குத்துச்சண்டை போட்டியில் கால்பதிக்கவுள்ளார்.16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், அமெரிக்க டைட்டில்களையும், டேக் டீம் சாம்பியன்ஷிப் டைட்டிலும் ஜான் ஸினா வென்று குவித்துள்ளார்.

 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

தற்பொழுது ரஸ்ஸில்மேனியா 36-ல் ஜான் ஸினா மீண்டும் களம் காண்கின்றார். தற்போது ஜான் ஸினா பிரே வ்யாட்டுடன் ரஸ்டல் மேனியாவில் எதிர்கொள்கிறார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.