‘தளபதி’யைத் தொடர்ந்து ‘தல’யுடன் நடிக்க விரும்பும் பிரபல நடிகர்!!!!

0
227

நடிகர் ஜீவா தற்போது மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் இவரின் கீ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து கொரில்லா மற்றும் ஜிப்சீ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் இவர். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மெகா ஹிட் படமாக அமைந்தது.

தற்போது ஜிப்சீ படம் குறித்து கூறிய அவர் தனக்கு தல அஜித் உடன் நடிக்க ஆசை எனக் கூறினார். தளபதி விஜய் உடன் நடித்தது பெருமையாக உள்ளது. அடுத்து தல அஜித் உடன் நடிக்க தனக்கு மிகுந்த ஆசை இருப்பதாக கூறினார். அதற்கான கதை அமைவதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.