ஆஸ்திரேலியாவில் ட்ரிபில்ஸ் சென்ற இந்தியருக்கு ரூ. 66,040 அபராதம் !

0
76

ஆஸ்திரேலியாவில் தனது 59வயதான மனைவி மற்றும் 6வயதான பேரக் குழந்தையுடன் 67வயதான இந்தியர் ஒருவர் ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது விதிமீறி வாகனம் ஓட்டுவதை கண்டறிந்த போலீஸார், இந்தியரை நிறுத்தி அபராதம் வித்திதார். ஆஸ்திரேலியாவில் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதை அறியாததால் இந்திய மதிப்பில் ரூ. 66,040 அபராதமாக செலுத்தியுள்ளார்.

இதில்,ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, எட்டு வயதுக்கும் குறைவான நபரை ஏற்றி சென்றது, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றியது, பயணியை ஹெல்மெட் அணிவிக்காமல் ஏற்றி சென்றது என அனைத்து பிரிவிற்கும் அபராதம் விதித்துள்ளனர்.