முகமது ஷமி கைது குறித்து புதிதாக வந்த செய்தி!

0
55

மனைவி தொடர்ந்த வழக்கில் முகமது சமியை கைது செய்ய அலிபோர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.இதனால் அவர் அளித்த புகாரின்பேரில் மேற்குவங்கக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது.மேலும் கொல்கத்தாவில் உள்ள அலிபோர் நீதிமன்றத்தில் சமியின் மனைவி ஹசின் ஜகான் சமி மற்றும் அவரது சகோதரர் அகமது மீது  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.முகமது ஷமி, 15 நாட்களுக்குள் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இதற்கு எதிராக முகமது சமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.பின்னர் இந்த வழக்கு மீதான விசாரணையில் முகமது சமியை கைது செய்ய அலிபோர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மேலும் வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதுவரை சமியை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here