தெலுங்கில் வெளிவரும் இருட்டு அறையில் முரட்டு குத்து….!!!யார் நடிக்கிறார்கள் தெரியுமா??

0
309

சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கி கௌதம் கார்த்திக் நடித்த இருட்டு அரையில் முரட்டு குத்து படம் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிபெற்றது,அந்த அடல்ட் நகைச்சுவை படம் இளைஞர்களிடையே ரசிக்கப்பட்டது.

தமிழ் படத்தில் வெற்றி பெற்ற பிறகு இந்தத் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. “சிக்காதி காடிலோ சித்தகோட்டு” என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை தமிழில் இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார்ரே இயக்கி இருக்கிறார்.

இனிது இனிது மற்றும் தங்கமகன் ஆகிய படங்களில் நடித்த அருண் கௌதம் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிக்கி தம்போலி, போசணி முரளி கிருஷ்ணா, ரகு பாபு, சத்தியம் ராஜேஷ், தாகுபூத்து ரமேஷ், மிர்ச்சி ஹேமந்த், நானன் கடவுல் ராஜேந்திரன், பாக்யஸ்ரீ மோட் ஆகியோர் மற்ற கதாபாத்திரத்தில் வருகின்றனர்.