கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பேன்…!உதயநிதி

0
112

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ திரைப்படம் வருகிற வெள்ளிக் கிழமை திரைக்கு வர இருக்கிறது. இதில் ஹீரோயினாக நித்யா மேனன் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி உதயநிதி ஸ்டாலின், சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

டைரக்டர் மிஷ்கின் சொன்ன ‘சைக்கோ’ கதை பிடித்து இருந்தது. கதாநாயகனுக்கும், ஒரு ‘சைக்கோ’ நபருக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்த படத்தின் கதை. இதில், கவுதம் என்ற கண்பார்வையற்ற இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ‘சைக்கோ’வாக ராஜ் நடித்துள்ளார். படத்துக்காக, சில நாட்கள் கிதார் கற்றுக்கொண்டேன். கண்பார்வையற்ற சிலரிடம் பேசிப்பழகினேன். அவர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பு நடக்கும்போது மிஷ்கின் ‘டென்ஷன்’ ஆக இருப்பார் என்று சொல்வார்கள். எந்த அளவுக்கு அவர் கோபப்படுவாரோ, அதே அளவுக்கு நடிகர்-நடிகைகளை உற்சாகப்படுத்துவார். இந்த படம் எனக்கும், மிஷ்கின் மற்றும் படக்குழுவினருக்கும் நல்ல பெயர் வாங்கி தரும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

அடுத்தபடியாக உங்கள் தாத்தா,கருணாநிதி இல்லாததை இழப்பாக உணர்கிறீர்களா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ,த்தா இல்லாததை ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக உணர்கிறேன். நான் நடித்த ‘மனிதன்’ படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அந்த சமயத்தில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரால் பார்க்க முடியவில்லை என வருத்ததுடன் தெரிவித்தார்.மேலும் உங்கள் தாத்தாவின் வாழ்க்கை வரலாறை வைத்து படமாக எடுப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு இது தொடர்பாக மூன்று பேர் என்னிடம் பேசியிருக்கிறார்கள். நிச்சயமாக தாத்தாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பேன் என தெரிவித்தார்.

எனவே கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,ஏற்கனவே ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படம் விரைவில் வருவதற்காககக விறுவிறுப்பின படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.