இருபது ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்தேன் …!கண்கலங்கிய ஆலியா பட்

0
122

ஹிந்தியில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய மகேஷ் பட் டின் மகளான ஷஹீன் பட் எழுதிய புத்தக அறிமுகம் விழா முமபியில் நடைபெற்றது.இதில் மகேஷ் பட், அவர் மனைவி சோனி ராஜ்தான், மகள்களான நடிகைகள் பூஜா பட், ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். விழாவில் பேசிய புத்தகத்தை எழுதியவரான ஷஹீன் பட், மன அழுத்தம் தமக்கு 20 ஆண்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டார். மன அழுத்தத்தைப் புரிந்துக் கொண்டு அதனை தவிர்க்க தமது புத்தகம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது சகோதரியின் புத்தகம் தம்மை நெகிழ்ச்சியடைய வைத்ததாக கூறிய ஆலியா பட், தினசரி வாழ்வில் மனதுக்குள் உருவாகும் இனம்புரியாத சோகம், வேலையில் ஆர்வமின்மை, சோர்வு , சலிப்பு போன்றவற்றால் பல்வேறு நரம்பியல், மூளை, நீரிழிவு தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.