ஊரடங்கில் வேலையிழந்து காய்கறி விற்ற இளம்பெண் பணி ஆணை…ரியல் ஹீரோவாக மாறிய நடிகர் சோனு சூட்..!

0
111

ஹைதராபாத்தை சேந்த சாரதா என்ற இளம்பெண், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த நிறுவனத்தில் இருந்து பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் சாரதாவும் ஒருவர்.

வேலை போனாலும் உறுதி குலையாமல் காய்கறி விற்பனையில் களமிறங்கினார் சாரதா. அதிகாலை 4 மணிக்கே மொத்த காய்கறி மார்கெட் சென்று, காய்கறிகளை வாங்கி, ஊருக்குள் விற்கிறார்.

இதில் எனக்கு எந்த வருத்தமோ, கவுரவ குறைச்சலோ இல்லை என்று அவர் கூறியிருந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட பலருக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக சாரதாவின் கதை சென்றுள்ளது.இந்த நிலையில், தனது உதவியாளர் சாரதாவை பார்த்து விசாரித்து, பணி ஆணைய வழங்கியுள்ளதாக சோனு சூட் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு சோனு சூட் ஒரு டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.