பொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கிறது?ட்விட்டர் விமர்சனம்

0
148

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்துள்ளார். அவர் மட்டுமின்றி இந்த படத்தில் ஆர். பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.பொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று இரவு வெளியான இந்த படத்தை பற்றி ரசிகர்கள் அனைவரும் பாசிட்டிவ்வாகத்தான் பேசி வருகின்றனர். படம் அதிகம் எமோஷ்னலாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

குறிப்பாக நேற்று இரவு FDFS காட்சியை வீட்டில் இருந்தே பார்த்த அனுபவம் பற்றி ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.