“காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்” சர்சையை ஏற்படுத்திய வினாத்தாள்…!

0
78

காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி  சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியின் மரணம் குறித்து வரலாறு நாடு முழுவதும் அனைவருக்கும் தெரிய உள்ள நிலையில் குஜராத்  மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் ஷஃபாலம் ஷாலா விகாஷ் சங்குல் என்ற அமைப்பு மூலம் நடத்தப்படும் அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில் தேர்வு நடைபெற்றது.

அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் “காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்” என்ற கேள்வியை இடம்பெற்றுள்ளது. இதனால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் “உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் கடிதம் எழுதுக ” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கும் மாநில கல்வித் துறைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை வினாவை  பள்ளி நிர்வாகமே தயாரித்துள்ளனர்.  என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.