எஸ்.பி.பி உடல்நிலை குறித்து நல்ல செய்தி சொன்ன அவரது மகன்…ரசிகர்கள் மகிழ்ச்சியில்

0
87

இந்திய அளவில் பல ஆண்டுகளாக சிறந்த பாடகராக திகழ்ந்து வருகின்றார் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். பல சிறப்பான பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. இந்நிலையில் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று அண்மையில் பாடகர் SPB அவர்களையும் தொற்றியுள்ளது. அவர் தற்போது சென்னையில் சூளைமேடுவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப நிலையில் தனக்கு கொரோனா இருப்பதை SPB தனது முகநூல் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார். வீடியோவில், “கடந்த 2-3 நாட்களாக எனக்கு ஒரு சிறிய அசவுகரியம் இருந்தது, “மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன், இது கொரோனா வைரஸின் மிகவும் லேசான நேர்மறை என்று அவர்கள் சொன்னார்கள், அவர்கள் என்னை வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தல் தங்கியிருக்கலாம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்” என்றார்.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறவே அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் நல்ல முறையில் தேறி வருகிறார். நேற்று அவர் மகன் சரண் அளித்த தகவலின்படி 15 முதல் 20 நிமிடம் வரை அவர் எழுத்து அமர்கிறார் என்றும் விரைவில் நல்ல முறையில் எழுத்து வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.