Unlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..!

0
85

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டிருந்த நான்காம் கட்ட ஊரடங்கின் இறுதி நாளில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன்மூலம் வர்த்தகத்திற்கு ஊக்குவிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் கோவிட்-19 பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நேற்றைய தினம் புதிய உச்சமாக 8,237 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மாநில அரசுகள் அளித்த தகவல்களின் படி, இந்தியாவில் 1,85,061 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெர்மனியை(1,83,426) விட அதிக பாதிப்பை இந்தியா பெற்றுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தை அடைந்துள்ளது.நேற்றைய தினம் மகாராஷ்டிராவில் 2,487 பேரும், டெல்லியில் 1,295 பேரும், தமிழ்நாட்டில் 1,149 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 378, மேற்கு வங்கம் 371, கர்நாடகா 299, தெலங்கானா 199 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாக பார்க்கப்படுவது குணமாகி வருபவர்கள்.