வலுப்பெற்று தீவிர புயலாக மாறிய நிவர் புயல்…திண்டாடும் மக்கள்

0
40

வங்கக் கடலில் உருவாகிய நிவர் புயல், தீவிர புயலாக உருவெடுத்தது. இதனையடுத்து இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிவர் புயல் தற்போது கடலூருக்கு கிழக்கு, தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 120கி.மீட்டர் முதல் 130கி.மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 140 கி.மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிவர் புயல் தற்போது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

சென்னையில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கே.கே.நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.