கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு….!

0
41

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.