தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

0
94

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று அப் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவு வானிலை மையம் கூறியுள்ளது.