‘கமலின்’ ஐடியா சூப்பர்னு கைகோர்த்த ‘ஜிவி பிரகாஷ்’..!வெப்சைட் வழி உதவி

0
50

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அந்த காணொளியில் ‘நாமே தீர்வு’ என்ற புதிய முயற்சியை அவர் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் – 19ஐ எதிர்த்துப் போராடுவதற்கான தனது நடவடிக்கைகளில் தன்னுடன் இணையுமாறு தன்னார்வலர்களைக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதால் பலர் இந்த நிகழ்வில் இணைந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை கஸ்தூரி இந்த நிகழ்வில் இணைவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நாமே தீர்வு குறித்தும் அதன் செயல்படு மற்றும் அதில் இணைவது குறித்தும் அறிந்திட இணையதளம் ஒன்றி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையத்தினை பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்திய அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். “நாமே தீர்வு இயக்கத்தின் அடுத்த கட்டம். உதவ நினைப்போரையும், உதவி வேண்டுவோரையும் இணைத்திடும் முயற்சி. இந்த இணையதளத்தை இன்று அறிமுகப்படுத்திய ஜி.வி. பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றிகள். இளைஞர்கள் இணைந்தால் தான் தீர்வுகள் விரைவாகும். இணைந்து மீட்போம் சென்னையை.” என்று அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.