Happy Christmas Day 2019: கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டமும்… கொஞ்சம் வரலாறும்…

0
79

கிறிஸ்தவர்களின் மாபெரும் கொண்டாட்ட திருவிழாவான கிறிஸ்துமஸ் திருவிழா, நாளை (25ம் தேதி) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்தவ பண்டிகையின் வரலாறு;

இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் என்று, கி.பி.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்ற மதப் போதகரால் அறிவிக்கப்பட்டது. ஏனெனில், இயேசு கிறிஸ்து கருவில் உருவாகியதாகக் கருதப்படும் நாள் மார்ச் 25 ஆகும். இதிலிருந்து , சரியாக, பத்தாவது மாதம் டிசம்பர் 25ம் தேதியே தொடங்குகிறது. டிசம்பர் 25ல் இருந்து, ஜனவரி 7ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தினத்தில் அவர் பிறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும்,டிசம்பர் 25ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாப்பட்டதாக, கி.பி 354ம் ஆண்டைச் சேர்ந்த பிலோகலஸ் நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவே, கிறிஸ்துமஸ் பண்டிகையின் பழமையான வரலாற்றுச் சான்றாகும்.

கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள்;

கிறிஸ்துமஸ் பண்டிகையை வெறுமனே கிறிஸ்துவர்கள் மட்டுமே கொண்டாடுவதில்லை. மற்ற மதத்தினரும் சேர்ந்தே இதை கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் இது ஒரு ஆண்டின் இறுதி மாதத்தின் இறுதி வாரம்.

அந்த வருடத்தை வழியனுப்பிவிட்டு, அடுத்து வரும் புது ஆண்டுக்காக மக்கள் காத்திருப்பார்கள். அதோடு எல்லோரும் விடுமுறையை தங்கள் உறவினர்களோடு கழிக்கும் காலகட்டமாகத் தான் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலம் இருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மேலும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் சில வாரங்களுக்கு முன்னரே தொடங்கி, புத்தாண்டு வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நமக்கு நினைவில் வருவது , நல்ல நீண்ட வெள்ளை தாடி, சிகப்பு நிற வெல்வெட் அங்கி, சிரித்த முகத்துடன் இருக்கும் ‘சாண்டா கிளாஸ் தாத்தா’ மற்றும் ஜீசஸ் உயிர்ப்பின் அடையாளமாக பார்க்கப்படும் ‘ஓக் மரம்’ ஆகிய இரண்டும் முக்கிய அம்சமாக திகழ்கின்றன.

மொத்தத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்குமே ஒரு உற்சாகமான பண்டிகையாகவே உள்ளது. மதங்களை கடந்த ஒற்றுமையின் சின்னமாக, கிறிஸ்துமஸ் விளங்குகிறது என்பதில் எந்த ஒரு ஐயமில்லை.

அனைவருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.