”நீலாம்பரி” முதல் ”ராஜமாதா” வரை…குவியும் பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்து மழை

0
50

1983ம் ஆண்டு Y.G. மகேந்திரன் அவர்களின் நடிப்பில் வெளியான ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் தனது 14வது வயதில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்திலேயே இவர் பாரதம் மற்றும் குச்சுப்பிடி போன்ற நடன முறைகளை முறையாக கற்றவர். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 250-க்கும் அதிகமான படங்களில் இவர் தற்போது வரை நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக 1999ம் ஆண்டு வெளியான படையப்பா என்ற திரைப்படம் இன்று வரை பலரால் பேசப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் இவருடைய நடிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

‘குயின்’ என்ற இணைய தொடரில் தற்போது நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 2020ம் ஆண்டில் ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கிறன்றன. இந்நிலையில் இன்று தனது 50வது பிறந்தநாளை அவர் தனது குடும்பத்தோடு கொண்டாடி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.