’’தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்’’- இணையத்தை தெறிக்கவிடும் ரகிட ரகிட ரகிட..!

0
37

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட தனுஷ் இன்று தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #HappyBirthdayDhanush என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

18 ஆண்டுகளுக்கு முன்பு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமா உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் இப்போது 40 படங்களைக் கடந்து அசைக்கமுடியாத தூணாக நிற்கிறார்.

கடைசியாக பொங்கல் வெளியீடான ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் காணப்பட்ட அவர், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது ‘ஜகமே தந்திரம்’ வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்றாலும், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். அவர்களுடன் இணைந்த படக்குழுவும், முன்பு அறிவித்ததை போலவே இன்று காலை ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் இருந்து ரகிட ரகிட ரகிட என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளது.

தனுஷ் குரலில் ஒலிக்கும் எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.