இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்… மாஸ்டர் படத்திலிருந்து வெளியான அசத்தல் ட்ரீட்

0
49

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆன அனிருத் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக க்விட் பண்ணுடா பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

மாஸ்டர் படம் பற்றி ஒரு சின்ன அப்டேட் கிடைக்காதா என்று எதிர்பா்ர்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாஸ்டர் படக்குழு தனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசுக்காக அனிருத் நன்றி தெரிவித்துள்ளார். #QuitPannuda என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.