தியேட்டரில் ரிலீசாகாமல் நேரடியாக டிவியில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷின் புதிய படம்!

0
31

பிரபல இசை அமைப்பாளரும்,ஹீரோவுமான ஜி.வி.பிரகாஷ் ஒரு புதிய நகைச்சுவை பொழுதுபோக்குக்காக ,காமெடி ஹிட் தயாரிப்பாளர் எம்.ராஜேஷுடன் கைகோர்த்துள்ளதாகவும், இந்த படம் விரைவான வேகத்தில் ஷூட்டிங் நடப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பட டைட்டில் குறித்து சமீபத்திய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ”வணக்கம்டா மாப்பிளை” என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

பிகில் பட புகழ் அமிர்தா அய்யர், டேனியல் , ரேஷ்மா மற்றும் பலர் ”வணக்கம்டா மாப்பிளை” படத்தில் நடித்துள்ளனர், மேலும் சன் டிவியில் நேரடியாக தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடவுள் இருகான் குமாருக்கு பிறகு ராஜேஷுடன் ஜி.வி.பிரகாஷின் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.