2019 ஆஸ்கார் அவார்டுகளை அள்ளிக்குவித்த க்ரீன் புக் திரைப்பட தமிழ் விமர்சனம்…

0
631

2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் அவார்ட் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது,இதில் சிறந்த திரைப்படத்துக்கான விருது க்ரீன் புக் படத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் கதை என்ன என்பதை பார்ப்போம்.

படம் 1962இல் நடப்பது போல் திரையமைக்க பட்டுள்ளது.மேலும் இது அந்த காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் அமெரிக்காவில் நடந்த இனவெறியே கதையின் கரு.

விகோ மோர்டன்சன் ஒரு முரட்டு வெள்ளை இன டிரைவர்,மஹர்ஷாலா அலி ஒரு பணக்கார கருப்பு இன பியானோய்ஸ்ட் இந்த இருவருக்கும் வளரும் நட்பு தான் கதை. மஹர்ஷாலா அலி இசை கச்சேரி நடத்துபவர் வாழ்கை ரசித்து வாழ்பவர் அவருக்கு அமெரிக்காவில் உள்ள தெற்கு பகுதிகளை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் தெற்கு அமெரிக்காவில் அந்த காலத்தில் இனவெறி தாக்குதல் அதிகம் அதன் காரணமாகவே அவரால் எங்கும் செல்ல முடியாத நிலை.இந்தநிலையில் தான் விகோ மோர்டன்சன் அவருக்கு அறிமுகமாகிறார்.

மஹர்ஷாலா அலி தான் அமெரிக்காவை சுற்றி பார்க்க விகோ மோர்டன்சனை அணுகிறார்.தனக்கு ஒரு பாடி
கார்டாகவும்,டிரைவராகவும் இருந்து அமெரிக்காவை சுற்றி காண்பித்தால் பணம் தருவதாக கூறுகிறார். விகோ மோர்டன்சனுக்கும் கருப்பு இனத்தவரை பிடிக்காது ஆனால் பணத்துக்காக ஒத்துக்கொள்கிறார்.இருவரும் க்ரீன் புக் ஒன்றை எடுத்து கொண்டு கிளம்புகின்றனர்.அந்த க்ரீன் புக்கில் தான் எங்கு செல்ல வேண்டும்,எங்க தங்க வேண்டும்,எந்த இடம் எங்கு இருக்கிறது என்பதை காட்டும் வழிகாட்டி.

போகும் இடமெல்லாம் மஹர்ஷாலா அலி கருப்பு இனத்தவர் என்பதால் வரும் பிரச்சனை அனைத்தையும்
விகோ மோர்டன்சன் தனி ஆளாக சமாளிக்கிறார். அந்த பயணத்தில் இறுதியில் இனவெறியை மறந்து எவ்வாறு இருவரும் நண்பராகிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.

படத்தின் ஹயிலைட் படத்தின் திரைக்கதை மற்றும் வசனம்.படம் மெதுவாக நகர்ந்தாலும் படத்தின் இறுதியில் ஒரு சிறந்த படத்தை பார்த்த திருப்பதி ஏற்படுகிறது.அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.