வெளியானது தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! அவரே வெளியிட்ட தகவல்..

0
106

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தீவீரமாக நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் துரைசெந்தில் குமார் இயக்கம் அடுத்த படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் பிஸ்சா, ஜிகர்தண்டா மற்றும் பேட்ட போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைவதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தின் மூலம் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் அறிமுகமாவதாகவும் துகள்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தினை பற்றிய முழு தகவலையும் தனுஷ் வெளியிட்டார். YNOT நிறுவனம் தயாரிக்கும் இந்த அப்படத்திற்கு தற்காலிகமாக ப்ரோடுக்ஷன் நம்பர் 18 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இந்த படமானது முழுவதும் இங்கிலாந்தில் நடைபெறும் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பானது அடுத்தமாதம் துவங்கும் எனவும் அறிவித்தனர். இந்த படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here