பேஸ்புக் ,வாட்சப்பில் வீடியோ அனுப்பினால் தங்க காசு இலவசம்-படக்குழுவின் புது ஐடியா.

0
117

சினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் ரசிகர்கள் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளிக்கொள்ளலாம். கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவரே இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில், தானே தயாரிப்பாளராகி இயக்கவும் செய்துள்ளார். அதே போல ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை தங்களுக்கு அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க ‘கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார். அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக், ஷேர் சாட், டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் ஐந்து நாளைக்கு ஒருமுறை ‘தங்கக்காசு’ வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும். இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. அக்ஷய் கிருஷ்ணன் நாயகனாக நடிக்க. நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here