பிக்பாஸ் 4 வீட்டின் அடுத்த நாமினேஷன் லிஸ்ட் ரெடி…!யாரெல்லாம் தெரியுமா..?

0
36

நான்காவது சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருவதால் முதல் நாளிலிருந்து ஷோ மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பது ஒரு புறமிருக்க பிக் பாஸ் ‘கடந்து வந்த பாதை’ என்ற பெயரில் ஒருடாக்ஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.அதில் அனைத்து போட்டியாளர்களும் தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி விரிவாக கூற வேண்டும் என்றும், அதன் இறுதியில் வீட்டில் இருக்க தகுதியான 8 பேர், தகுதி இல்லாத மேலும் 8 பேர் என முடிவு செய்து கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் எட்டு பேர் தங்கள் கதையை சொல்லி முடித்து இருந்த நிலையில் அதிலிருந்து சனம் செட்டி, கேப்ரியலா, சம்யுக்தா மற்றும் ரேகா ஆகியோர் அடுத்த வார நாமினேஷன் லிஸ்டில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இப்படி போட்டியாளர்கள் வாழ்க்கையில் முன்பு நடந்த விஷயங்கள் அடிப்படையில் நாமினேஷன் தேர்வு செய்வது தவறு என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இந்நிலையில் அடுத்த எட்டு பேர் தங்கள் கதைகளை சொல்லிக் முடித்திருக்கும் நிலையில் அந்த எட்டுப் பேரிலிருந்து 4 பேர் நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜித், ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் தான் அடுத்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இதை சம்யுக்தா அனைவர் முன்னிலையில் அறிவித்தார். இந்த நான்கு பேர் தவிர மீதம் இருக்கும் நான்கு பேர் கதைகளும் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அதனால் தான் இந்த நான்கு பேரை நாம் லிஸ்டில் சேர்க்க கூறுவதாக இவர் காரணத்தை தெரிவித்தார். இது தற்போது வெளிவந்திருக்கும் புதிய ப்ரொமோவில் காட்டப்பட்டு உள்ளது.