பிரபல நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்…சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

0
96

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அமலா பால், தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தைப் பார்த்த பலரும் அமலாபாலின் துணிச்சலான நடிப்பை வியந்து பாராட்டினர். இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்திருக்கும் அதோ அந்த பறவை போல திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று மரணமடைந்துள்ளார். அவரது மறைவு குடும்பத்தாரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.நாளை பால் வர்கீஸின் உடல் கிறிஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் கேரள மாநிலம் குருப்பம்பாடியில் நடைபெற உள்ளதாகவும் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தந்தையை இழந்துவாடும் நடிகை அமலாபாலுக்கு அவரது திரைத்துறை நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.