ஒருவழியாக ரிலீசுக்கு தயாராகும் “எனை நோக்கி பாயும் தோட்டா”!!! வெளியிடும் தேதி அறிவிப்பு…

0
97

தனுஷ் நடிப்பில் பல ஆண்டுகளாக வெளியிடாமல் தள்ளிப்போகும் திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தினை கெளதம் வாசுதேவ மேனன் இந்த படத்தினை இயக்கியுள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. மேகா ஆகாஷ் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது கால் தடத்தை பதித்தார். ஆனால் இந்த படம் தள்ளிப்போனதால் தற்போது பல படங்களில் நடித்துவிட்டார்.

இந்த படமானது கிட்டதட்ட 2017 ஆம் ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில பொருளாதார காரணங்களால் தள்ளிபோகி கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் இந்த படம் திரைக்கே வரத்து எனவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் இதற்க்கெல்லாம் முடிவு கட்டும் படி வரும் 26 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது சொன்னபடி ரத்திரைக்கு வருமா என்பதனை காத்திருந்து பார்ப்போம்.