உலக கோப்பையை வென்று சாதனை படைத்த இங்கிலாந்து!!! சோகத்தில் நியூஸிலாந்து….

0
111

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது நேற்றைய தினம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் 55 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரபத்தில் சொதப்பினாலும் பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் அதிரடியால் ஓரளவுக்கு இலக்கை எட்டியது.

பின் பட்லர் அவுட்டாக ஒற்றையாளாக போராடி இறுதியில் போட்டியை ட்ரா ஆக்கினார். இறுதி போட்டி என்பதால் சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் 15 ரன்கள் அடிக்க பின்னர் வந்த நியூஸிலாந்து வீரர்களும் 15 ரங்களே குவித்தனர். இதனால் போட்டி மீண்டும் சமனானது. இருந்தாலும் இங்கிலாந்து நியூஸிலாந்தை காட்டிலும் அதிக பௌண்டரிகள் அடித்ததன் காரணமாக இங்கிலாந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல்முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.