மனிதாபிமானம் எங்கே..?கர்ப்பிணி யானை சாப்பிட வெடிமருந்தை கொடுத்து கொன்ற மிருகங்கள்! பிரபலங்கள் கொந்தளிப்பு

0
62

கேரள மாநிலம் மலப்புரத்தில் கர்ப்பமாக இருந்த காட்டு யானை ஒன்று உணவு தேடி சுற்றித் திரிந்தது. அப்பொழுது அந்த யானையை விரட்ட அன்னாசிப்பழத்தில் வெடியை வைத்து கொடுத்துள்ளனர். பழத்தை சாப்பிட்ட யானையின் வாயில் வெடி வெடித்து காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அந்த யானை தன் குட்டியை நினைத்து பதறியதே தவிர அங்கிருந்த யாரையும் தாக்கவில்லை, வீடுகளை சேதப்படுத்தவும் இல்லை. துடித்தபடியே வெள்ளியாறுக்கு சென்று தனது வாயை நீருக்குள் முக்கியபடி நின்றது. நீரில் நின்றபடி உயிர் இழந்தது.

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடியை வைத்துக் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபலங்கள் கொந்தளித்து உள்ளனர்.

ஒரு கர்ப்பிணி யானையை இப்படி மனசாட்சியே இல்லாமல் உணவில் வெடி வைத்து சாகடித்தவர்கள் மீது மக்கள் கோபம் அடைந்துள்ளனர். யானைக்கு நேர்ந்த கதியை பார்த்த திரையுலக பிரபலங்கள் கொந்தளித்து ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தபோது தான் அது கர்ப்பமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. யானையின் வயிற்றில் இருந்த குட்டி யானையின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

India: Pregnant elephant dies in Kerala after being fed pineapple ...

அதை பார்த்த பிரபலங்களும், மக்களும் இந்த கொடுமையை செய்தவர்களை சும்மா விடக் கூடாது என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பலரும் கேரள முதல்வர் பினரயி விஜயனை மென்ஷன் செய்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.