‘தேவையில்லாதவற்றறை நீக்குங்கள்’ சமூகவலைதள நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!!

0
182

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பும் பரப்புரைகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையர் அவர்கள் கூறுகையில், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை தாமாக நீக்குவது தொடர்பாக சமூக வலைத்தளங்களின் இந்திய  நிர்வாகிகளிடம் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரை செய்யும் கட்சி மற்றும் கட்சியினர் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும் என கூறியுள்ளார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமூக வலைத்தளங்களில் செயல்படும் அரசியல் காட்சிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.