நிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை … முதலமைச்சர் அறிவிப்பு..!

0
57

நிவர் புயல் இன்று கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டுமே பணிபுரிவார்கள். புயல் கரையைக் கடக்கும் வேளையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்து உள்ளார்.

நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் நிவர் புயல் எதிரொலியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.