திருமாவளவன் குறித்த சர்ச்சை ட்விட்…நடிகைகள் காயத்ரி ரகுராம்,கஸ்தூரி மீது போலீஸ் புகார்…!

0
87

நடிகைகள் காயத்ரி ரகுராம் மற்றும் கஸ்தூரி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் விசிக கட்சி தலைவரான திருமாவளவன் குறித்து இழிவாகவும், தரம் தாழ்த்தி அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்தார்.இவர்களது ட்விட்டை கண்டித்து நேற்றைய தினமே விசிக கட்சி தொண்டர்கள் நடிகை காயத்ரி வீட்டை முற்றுகையிட்டனர் .

இந்நிலையில்,தற்பொழுது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி, நடிகைகள் கஸ்தூரி,காயத்ரி ரகுராம் ஆகியோரை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் கள்ளக்குறிச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருமாவளவனைப் பற்றி ட்விட்டரில் இழிவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிட்ட நடிகைகள் மற்றும் வலைத்தளங்களில் ஆதரவாக இவர்களை பின்தொடர்பவர்களையும் ,கொலை மிரட்டல் விடுத்தவர்களையும் கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று புகார் அளித்தனர்.