தமிழ் நடிகரின் குடும்பத்துக்கே கொரோனா பாசிட்டிவ்…மருத்துவமனையில் அனுமதி

0
67

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் திரையுலகையும் விட்டு வைக்கவில்லை என்பதும் ஏற்கனவே அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், தமன்னா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி வீடு திரும்பினார்கள் .

இந்த நிலையில் தற்போது பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனை டாக்டர் ராஜசேகர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.எனக்கும் எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உண்மைதான். நாங்கள் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். நானும் ஜீவிதாவும் குணமாகி வருகிறோம். விரைவில் முழுமையாக குணமாகி வீடு திரும்புவோம் என்று கூறியுள்ளார்.