பூஜையுடன் தொடங்கியது சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம்

0
81

நடிகர் பிரசன்னா மற்றும் ஷாம் சில காலமாக பல படங்களில் இரண்டாம் கதாநாயகர்களாக நடித்துவருகிறார்கள்.இந்நிலையில் இருவரும் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது .

இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.இந்த வருடம் வெளியான கன்னடப் படமான மாயாபஸார் 2016 படம். தமிழில் ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி பெற்றுள்ளார்.

வீராப்பு, தில்லு முல்லு போன்ற படங்களை இயக்கிய பத்ரி, மாயாபஸார் 2016 ரீமேக்கைத் தமிழில் இயக்குகிறார்.

பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஷ்ருதி மராத்தே போன்ற பல திரை பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் சத்தியா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

ஆர்யா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை படத்தின் 3ஆம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .