இயக்குநர் அட்லியின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்

0
86

நடிகையும் இயக்குநர் அட்லியின் மனைவியுமான ப்ரியாவின் தாத்தா கலியராஜ் காலமாகியுள்ளார்.

பிரபல இயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ப்ரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் ப்ரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது ஆகிறது . கடந்த வாரம் கூட இருவரும் அருமையாக உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நண்பராகவும் ஆலோசகராகவும் எனக்கு இருந்தார். நீங்கள் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்துபோயிருக்கிறது.

எங்கள் குடும்பம் ஒரு தூணை, நல்ல நண்பரை இழந்துவிட்டது. எங்கள் வாழ்க்கையில் உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.
இந்த தருணத்தில் வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு என்பதை உணர்கிறோம். எனவே உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வாழும் வரை பகிருங்கள்.

நாம் வாழும் ஒவ்வொரு நாளும் கடவுளின் பரிசாகும் என்று உருக்கமாக தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் அட்லி.