அரசியலுக்கு ரஜினி தேவையில்லை…ஆனால் அவரது ஆன்மீக அரசியல்..?பிரபல இயக்குனரின் பரபரப்பு ட்விட்

0
41

ரஜினியின் உடல்நலம் குறித்த தகவல் வெளியான பிறகு அவர் அரசியல் கட்சி துவங்க மாட்டார் என்றே பலரும் நினைத்தனர். இந்நிலையில் ஜனவரி மாதம் அரசியல் கட்சி துவங்குகிறேன், டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரஜினி நேற்று ட்வீட் செய்தார்.அந்த ட்வீட்டில் அவர் மேலும் கூறியதாவது,

வரப் போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று தெரிவித்தார்.

அது என்னத்த மாத்தப் போகிறீர்கள், அது என்ன ஆன்மீக அரசியல் என்று சமூக வலைதளங்களில் ரஜினியை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் ரஜினி பற்றி இயக்குநர் அருண் வைத்யநாதன் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,எனது நண்பர்கள் குழுவில் இருக்கும் அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.