கார்த்தி சுப்புராஜ் கதையை திருடினாரா..?கிளம்பிய புது சர்ச்சை

0
41

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் உத்தமவில்லன் பட நடிகர் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த ஆந்தாலஜி திரைப்படம் நேற்று வெளியானது. அமேசான் ப்ரைம் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘புத்தம் புது காலை’ திரைப்படம் ஊரடங்கு தளர்வின் போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சச்சின் கிரிக்கெட் கிளப் என்னும் குறும்படத்தை யூடியூபில் அஜயன் பாலா வெளியிட்டிருந்தார். தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் புத்தம் புது காலை படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி பாபி சிம்ஹா நடித்திருக்கும் மிராக்கிள் குறும்படத்தின் கதை தன்னுடையது என பேஸ்புக்கில் அஜயன் பாலா எழுதியிருக்கிறார். இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.