‘ஸ்வீட்டி, க்யூட்டி…’! விரட்டி விரட்டி கொஞ்சி தோணியை வெட்கப்படவைத்த சாக்‌ஷி! – வீடியோ

0
170

பிரபல கிரிக்கெட் வீரரான தோணி,தனது குடும்பத்தினருடன் அவ்வப்பொழுது எடுக்கும் வீடியோ இணையத்தில் எப்பொழுதுமே வைரலாகி கொண்டி இருக்கும்.அந்த வகையில்,தோனியின் மனைவி சாக்‌ஷி தனது கணவரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கொஞ்சி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தனது தோழிகளுடன் நிற்கும் சாக்‌ஷி தோனி தனது கணவர் தோனி மாடியிலிருந்து இறங்கி வருவதை வீடியோ எடுக்கிறார். அவரை ‘ஸ்வீட்டி, க்யூட்டி…’ என கொஞ்சி அழைப்பதைக் கண்டுகொள்ளாமல் தோனி செல்கிறார். அவரைப் பின் தொடர்ந்தே செல்லும் சாக்‌ஷி தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனைப் பேரிடமும் தோனியை ‘ஸ்வீட்டி ஆஃப் தி டே’ எனக் கூறுவார்.

வெட்கப்பட்டுக் கொண்டே வீடியோவில் சிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் தோனியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.